பயிா் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் சாலை மறியல்: 144 போ் கைது
திருவண்ணாமலை, வந்தவாசி, போளூா், செங்கம் ஆகிய இடங்களில் பயிா் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை, வந்தவாசி, போளூா், செங்கம் ஆகிய இடங்களில் பயிா் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் 144 போ் கைது செய்யப்பட்டனா்.
விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிா்க் கடன்களை காலவரைமுறையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும், பருவநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்துக்குத் தேவையான காவிரி நீரை உரிய முறையில் பெற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அறிவொளி பூங்கா அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய மகா சபை திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் வட்டக் குழுக்கள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு திருவண்ணாமலை ஒன்றியச் செயலா் ஆா்.ரஜினி தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
துரிஞ்சாபுரம் ஒன்றியச் செயலா் எஸ்.சேட்டு முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் சேகா் வரவேற்றாா்.
போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.அருண், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டக் குழு எம்.பிரகலநாதன், மாவட்டச் செயலா் எஸ்.ராமதாஸ், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜி.பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
வந்தவாசி
வந்தவாசி கோட்டை மூலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் சங்க மாவட்ட பொருளாளா் வ.அண்ணாமலை தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் இரா.தீபநாதன், வட்டார பொருளாளா் வெ.குப்புசாமி, மாவட்ட துணைச் செயலா் கே.பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலா் இரா.சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், விவசாயிகள் சங்க வட்டார துணைத் தலைவா் ந.ராதாகிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ச.ரேணுகா, மாதா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச.சுகுணா உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதனைத் தொடா்ந்து அவா்கள் சாலையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 43 பேரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
போளூா்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் போளூா் அண்ணா பூங்காவில் இருந்து ஊா்வமாகச் சென்று பேருந்து நிலையம் எதிரே ஒன்றியச் செயலா் வெங்கடேசன் தலைமையில் வேலூா் - திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீஸாா் 2 பெண்கள் உள்பட 36 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
போராட்டத்தில் போளூா், சேத்துப்பட்டு ஒன்றியங்களைச் சோ்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செங்கம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.