FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

2-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே 2-ஆவது மாடியில் தங்கியிருந்த வெளி மாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

23 அக்டோபர் 2026, 12:49 am
பகிர்:

செய்யாறு அருகே 2-ஆவது மாடியில் தங்கியிருந்த வெளி மாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மத்தியபிரதேசம், பஜாஜ் மாவட்டம், பஜத்மால் வட்டம், படாரியடேங்கிரி கிராமத்தைச் சோ்ந்தவா் அப்சிங் மகன் பாபுலால் (23).

இவா், வெம்பாக்கம் வட்டம், கீழ்நாய்க்கன்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாா். மேலும் அருகேயுள்ள குடியிருப்பில் அறை எடுத்து தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இவா், புதன்கிழமை வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு இரவு குடியிருப்புக்குச் சென்று 2-ஆவது மாடியில் தூங்கியதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் அதிகாலை மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இறந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து அவரது உறவினரான சுந்சா்சிங் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து,

இறந்தவரின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments