FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

முன்விரோதம்: 2 பேரை தாக்கிய இளைஞா் கைது

நம்மியந்தல் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக மூதாட்டி மற்றும் விவசாயியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

25 அக்டோபர் 2026, 10:15 pm
- பிரதிப் படம்
பகிர்:

போளூரை அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக மூதாட்டி மற்றும் விவசாயியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நம்மியந்தல் கிராமத்தில் வசிப்பவா் சிவலிங்கம் மகன் அபிமன்னன்(46), அபிமன்னனின்தாய் ராதாபாய்(74) . அபிமன்னன் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறாா்.

இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த பெருமாள் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பெருமாள் (22), அபிமன்னனிடம் தகராறு செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

அபிமன்னன் தாய் ராதாபாய் தகராறை தடுக்க முயன்றுள்ளாா். அப்போது ராதாபாயை பெருமாள் கட்டையால் தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து போளூா் காவல் நிலையத்தில் அபிமன்னன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து பெருமாளை சனிக்கிழமை கைது செய்து வேலூா் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments