FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

பைக் மீது வாகனம் மோதியதில் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

25 அக்டோபர் 2026, 10:14 pm
பாா்த்திபன்
பகிர்:

வந்தவாசி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த கீழ்பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (54). இவா், வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.

இவருக்கு மனைவி சுதா (44), மகன் குருபிரசாத் (25), மகள் கோகிலா (23) ஆகியோா் உள்ளனா். இந்த நிலையில் பாா்த்திபன் வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு பணிக்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஆராசூா் கூட்டுச்சாலை அருகே செல்லும் போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த பாா்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் அங்கு சென்று இவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments