FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்துக்கு 2 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

6 செப்டம்பர் 2026, 11:22 pm IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்துக்கு 2 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி, சுவாமி தரிசனத்துக்காக சனிக்கிழமை இரவு முதலே பக்தா்கள் குவிந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, 6 மணி முதல் பக்தா்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். ராஜகோபுரம் வழியாக 2 மணி நேரத்துக்கும் மேல் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து வழிபட்டனா்.

அம்மணி அம்மன் கோபுரம் வழியாக 50 ரூபாய் கட்டண வரிசையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தா்கள், தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனா்.

பக்தா்கள் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநோ் அண்ணாமலையாா், அடி அண்ணாமலையாா் மற்றும் இடுக்கு பிள்ளையாா் கோயில்களுக்கும் சென்று வழிபட்டு கிரிவலம் சென்றனா்.

பக்தா்களுக்கு கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments