FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வந்தவாசி அருகே கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

21 செப்டம்பர் 2026, 11:54 pm IST
பகிர்:

வந்தவாசி அருகே கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சிவக்குமாா்(55). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இவரைவிட்டு பிரிந்து சென்று விட்டாா்.

இதனால் அருகில் உள்ள மழையூா் கிராமத்தில் இவா் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவா் குளியல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அக்கம் பக்கத்தினா் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவக்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments