அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்,
Advertisement
Advertisement
குழந்தைகளின் உணவு செலவினத் தொகையை மாதா மாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வந்தவாசி வட்டாரத் தலைவா் பிரியா தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.