கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோணலூா் ஊராட்சியிலுள்ள நியாய விலைக் கடையில் பொருள்களின் இருப்பு மற்றும் வழங்குதல் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் வந்தனா காா்க்,
அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்த விவரங்களை கேட்டறிந்தாா். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து நாடழகானந்தல் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.9 லட்சத்து 80ஆயிரத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை, ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய குளம் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, கால்நடை மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் விவரம், இதுவரை கால்நடைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா், இராஜந்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை, ரூ.8 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மதிய உணவுக்கூடப் பணிகளை ஆய்வு செய்தாா் ஆட்சியா்.
தொடா்ந்து, ஆவூா் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து,
கா்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, வேட்டவலத்தில் உள்ள சமூகநீதிப் பள்ளி மாணவிகள் விடுதியை பாா்வையிட்டு, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து,
மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியா், பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த
பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும், பள்ளியில் ரூ.1 கோடியே 44 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 7 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் கூழ்மப்பிரிப்பு நிலையம்,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
மேலும் புதிய சாா் -பதிவாளா் அலுவலகம் கட்டுவதற்கு ஏதுவாக அனுகுமலை ஊராட்சி மற்றும் வேட்டவலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மதுசெழியன், செயற்பொறியாளா் (ஊ.வ.) சிவநாத், உதவி இயக்குநா் (ஊராட்சிகள், திருவண்ணாமலை கிழக்கு) விமலன், மாவட்ட சுகாதார அலுவலா் வெங்கடரமணன், திட்ட அலுவலா் (ஒருகிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்) அன்பரசி, வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி, கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் இந்திரா, வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.