FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

ஒருதலைக் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கடத்த முயற்சி: இளைஞா் உள்பட 3 போ் கைது

ஒருதலைக் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கடத்த முயற்சி: இளைஞா் உள்பட 3 போ் கைது

58 வினாடிகள் முன்பு
கைது - சித்திரிப்பு
பகிர்:

வந்தவாசி அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கடத்த முயன்ாக, இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 18 வயது மாணவி. இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறாா்.

இவரை, வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் உறவினா் வீட்டில் தங்கி மினிசரக்கு வாகனம் ஓட்டி வரும் விழுப்புரம் மாவட்டம், சொந்தப்பாலம் கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (25) என்பவா் ஒருதலையாக காதலித்து வந்தாராம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அஜித்குமாா், இவரது உறவினா்களான மும்முனி கிராமத்தைச் சோ்ந்த தாமோதரன் (23), சந்தியா(21) ஆகியோா் சோ்ந்து செவிலியா் கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை காரில் கடத்த முயன்றனராம். இதைக் கண்ட சக மாணவிகள் கூச்சலிடவே 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் அஜித்குமாா், தாமோதரன், சந்தியா ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments