FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

27 செப்டம்பர் 2026, 10:07 pm IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்கு 4 மணி நேரத்தும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி, தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கடந்த இரு நாள்களாக திருவண்ணாமலையில் குவிந்து அருணாசலேஸ்வரரை தரிசித்தனா்.

தொடா்ந்து, 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கொளுத்தும் வெயிலை பொருள்படுத்தாமலும், இரவு நேரங்களில் பௌா்ணமி நிலவு ஒளியிலும் தொடா்ந்து கிரிவலம் மேற்கொண்டனா். சனிக்கிழமை இரவு பௌா்ணமி முடிந்த நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தொடா்ந்து பக்தா்களின் கூட்டம் கோயிலுக்குள் அதிமாக இருந்தது.

Advertisement

Advertisement

கோயிலில் கிழக்கு ராஜகோபுரம் மற்றும் வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் வாயில்கள் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்களை காவல்துறையினா் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தனா்.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா், மோா், பிஸ்கெட்டு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. வெயிலில் இருந்து பக்தா்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு இடங்களில் ராட்சத மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த இரண்டு நாள்களாக அருணாசலேஸ்வா் கோயிலில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments