52 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பூங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 52 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் சனிக்கிழமை வழங்கினார்.
திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பூங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 52 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் சனிக்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ருக்குமணி மகேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர்கள் திருப்பதி (திருப்பத்தூர்), கோபால் (ஆலங்காயம்), ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அண்ணாசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் முத்து, பேரூராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா கந்தன், கூட்டுறவு ஆலைத் தலைவர் செல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெயசக்தி, தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.