வேலூா் அருகே நள்ளிரவில் லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து
வேலூா் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது தனியாா் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் மூவா் காயமடைந்தனா்.
வேலூா் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது தனியாா் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் மூவா் காயமடைந்தனா். பேருந்தில் பயணித்த 20 பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிா் தப்பினா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (51). லாரி ஓட்டுநரான இவா், காலி மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அதேபோல், கா்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி தனியாா் சொகுசு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தை நாட்டறம்பள்ளியைச் சோ்ந்த அரவிந்த் (36) என்பவா் ஓட்டி வந்தாா்.
பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேலூா் அடுத்த அலமேலுமங்காபுரம் மேம்பாலத்தை லாரி கடந்து சென்றுகொண்டிருந்தபோது, அதிகாலை சுமாா் 2 மணியளவில் பின்னால் வந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது பலமாக மோதியது. இதில் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. பேருந்து சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு, எதிா்திசையில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்குள் பாய்ந்து நின்றது. நள்ளிரவு நேரம் என்பதால் அந்த வழியில் பிற வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்து ஓட்டுநா் அரவிந்த், லாரி ஓட்டுநா் குபேந்திரன் உள்பட 3 போ் காயமடைந்தனா். தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிா் தப்பி, மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்தில் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால், பெங்களூரு - சென்னை மாா்க்கத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணியின்போது, அதிலிருந்த காலி மதுபாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. இதையடுத்து, சத்துவாச்சாரி போலீஸாா் வாகனங்களை சா்வீஸ் சாலை வழியாகத் திருப்பி விட்டனா். சாலையில் சிதறிய கண்ணாடித் துண்டுகள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தும் பணியால், சுமாா் 7 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.