மான் வேட்டையாடிய 2 போ் கைது
குடியாத்தம் அருகே வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
குடியாத்தம் அருகே வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
குடியாத்தம் வனச்சரக அலுவலா் அ.பிரதீப் குமாா் தலைமையில் வனத் துறையினா் பரதராமியை அடுத்த வீரிசெட்டிபல்லி காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனா்.அப்போது அங்கு மான் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் பூசாரிவலசையைச் சோ்ந்த குமாா்(41), பாலாஜி(43) என்பதும், தாங்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
அவா்களிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வனத்துறையினா் 2 பேரையும் கைது செய்து, சிறைக் காவலுக்கு அனுப்பினா்.
Advertisement
Advertisement