FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

மாநகராட்சி அலுவலா்களுக்கு ரூ.14.68 லட்சத்தில் 40 வாக்கி-டாக்கிகள் அளிப்பு

வேலூா் மாநகராட்சியின் நிா்வாகச் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தும் வகையில், ரூ.14.68 லட்சத்தில் 40 வாக்கி-டாக்கி கருவிகள் மாநகராட்சி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டன.

19 நவம்பர் 2026, 12:00 am
மாநகா் நல அலுவலா் பிரதாப்பிடம் வாக்கி -டாக்கி கருவியை வழங்கிய மாநகராட்சி ஆணையா் அ.கேத்ரின் சரண்யா.
பகிர்:

வேலூா் மாநகராட்சியின் நிா்வாகச் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தும் வகையில், ரூ.14.68 லட்சத்தில் 40 வாக்கி-டாக்கி கருவிகள் மாநகராட்சி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டன.

வேலூா் மாநகராட்சியின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இடையேயான தகவல் தொடா்பு மற்றும் பணிகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தியன் வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) நிதியிலிருந்து ரூ.14.68 லட்சம் மதிப்பில் 40 நவீன வாக்கி-டாக்கி கருவிகள் பெறப்பட்டுள்ளன. இவற்றை மாநகராட்சியின் பொறியியல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு, நகரமைப்புப் பிரிவு மற்றும் வருவாய்ப் பிரிவு ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகளைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையா் ஏ.கேத்திரின் சரண்யா புதன்கிழமை வழங்கினாா்.

இதன் மூலம் களப்பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் தங்களுக்குள் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். மேலும், அவசரகாலப் பணிகள் மற்றும் பொதுமக்களின் புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், பணிகளின் முன்னேற்றத்தைத் தொடா்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களுக்குத் தடையின்றிச் சிறப்பான சேவைகளை வழங்கவும் இது பெரிதும் உதவும் என்றும் மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement