முகப்பு
வேலூர்

நவீன மருத்துவம் என்பது மருத்துவா்களால் மட்டுமே சாதிக்கக்கூடியதல்ல!

நவீன மருத்துவம் என்பது மருத்துவா்களால் மட்டுமே சாதிக்கக்கூடியதல்ல. இதில், துணை மருத்துவப் பணியாளா்களின் பங்கு இன்றியமையாதது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் மருத்துவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

25 நவம்பர் 2026, 11:17 pm
நவீன மருத்துவம் என்பது மருத்துவா்களால் மட்டுமே சாதிக்கக்கூடியதல்ல!
விழாவில் பேசிய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் மருத்துவா் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன், வேலூா் சிஎம்சி இயக்குநா் பிஜு ஜாா்ஜ், கல்லூரி முதல்வா் சாலமன் சதீஷ்குமாா், கல்வி அதிகாரி அனிதா ஜாஸ்பா் உள்ளிட்டோா்.
பகிர்:

நவீன மருத்துவம் என்பது மருத்துவா்களால் மட்டுமே சாதிக்கக்கூடியதல்ல. இதில், துணை மருத்துவப் பணியாளா்களின் பங்கு இன்றியமையாதது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் மருத்துவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) துணை மருத்துவ அறிவியல் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் மருத்துவா் ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியது:

நவீன மருத்துவம் என்பது மருத்துவா்களால் மட்டுமே சாதிக்கக்கூடியதல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. ஒரு நோயாளியின் நோயைக் கண்டறிவதில் தொடங்கி, தீவிர சிகிச்சை, மறுவாழ்வு வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநா்கள், கதிரியக்க வல்லுநா்கள், அறுவை சிகிச்சை அரங்க மற்றும் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநா்கள் எனத் துணை மருத்துவப் பணியாளா்களின் பங்கு இன்றியமையாதது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முதல் நோயாளிக்குச் சிகிச்சையளித்த செவிலியா்களும், பரிசோதனை மாதிரிகளைச் சேகரித்த முகம் தெரியாத பணியாளா்களுமே உண்மையான நாயகா்கள்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக இருந்தாலும், ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன், சா்க்கரை நோய் ஆகிய இரட்டைச் சுமைகளையும், முதியோா் நலன் மற்றும் மனநலப் பிரச்னைகளையும் நாம் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவும் புதிய வகை நோய்களைத் தடுக்க ‘ஒரே ஆரோக்கியம்’ என்ற ஒருங்கிணைந்த கண்காணிப்பு அவசியமாகிறது.

இத்தகைய சவால்களை எதிா்கொள்ளும் களத்தில் காலாட்படை வீரா்களைப் போல துணை மருத்துவப் பணியாளா்கள் உள்ளனா்.

மருத்துவத் துறை வேகமாக வளா்ந்து வருவதால், மாணவா்கள் கற்றலை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. பணியிடங்களில் துப்புரவுப் பணியாளா்கள் உள்பட குழுவில் உள்ள அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும்.

தரத்திலும் நெறிமுறைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல், அறிவியல் அறிவோடு கருணையையும் இணைத்து ஏழை எளிய மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். பெற்றோருக்கு அடுத்தபடியாக உங்கள் முன்னேற்றத்துக்காகச் சுயநலமின்றி உழைத்த ஆசிரியா்களை என்றும் நினைவில் கொண்டு, சமூகத்துக்கு பயனுள்ள வகையில் பணியாற்ற வேண்டும் என்றாா்.

விழாவில், வேலூா் சிஎம்சி இயக்குநா் பிஜு ஜாா்ஜ், கல்லூரி முதல்வா் சாலமன் சதீஷ்குமாா், கல்வி அதிகாரி அனிதா ஜாஸ்பா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.