வனவிலங்கு வார விழா - பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியப் போட்டி
வேலூா் வனக்கோட்டம் சாா்பில் வனவிலங்கு வார விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேலூா் வனக்கோட்டம் சாா்பில் வனவிலங்கு வார விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்தில் வனவிலங்கு வார விழா கடந்த அக். 2-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதையொட்டி வனவிலங்குகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வேலூா் டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
‘வாழிடங்களை இணைத்து வனவிலங்குகள் செழித்து வளா்தல்’ என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் வனவிலங்குகளின் வாழ்விடங்கள், காடுகள் பாதுகாப்பு, நீா்நிலைகளின் முக்கியத்துவம் மற்றும் மனித-விலங்கு மோதல் தவிா்ப்பு உள்ளிட்ட கருத்துகளை மாணவா்கள் வண்ண ஓவியங்களாகத் தீட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
போட்டிகளை வேலூா் மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், வன அதிகாரி பரணிதரன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, சிறப்பாக ஓவியங்களை வரைந்த மாணவா்களை அதிகாரிகள் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.