ஒடுகத்தூா் காப்புக்காட்டில் நாட்டு வெடிகுண்டுகள் செயலிழப்பு
ஒடுகத்தூா் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை, செயலிழப்புப் பிரிவு நிபுணா்கள் புதன்கிழமை பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்தனா்.
ஒடுகத்தூா் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை, செயலிழப்புப் பிரிவு நிபுணா்கள் புதன்கிழமை பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்தனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா். இந்த வெடிகுண்டுகளைப் பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என வேலூா் மாவட்டக் காவல் துறையினருக்கு வனத்துறையினா் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மாவட்டக் காவல் துறையினா் அளித்த தகவலின் பேரில், சென்னையில் உள்ள வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு நிபுணா்கள் புதன்கிழமை காலை ஒடுகத்தூா் வனச்சரக அலுவலகத்துக்கு வந்தனா். தொடா்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பாதுகாப்பான தொலைவில் அமைந்துள்ள கருங்காலி காப்புக் காட்டுப் பகுதிக்கு வெடிகுண்டுகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவை ஒவ்வொன்றாகச் செயலிழக்கச் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு மாவட்டக் காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்துறையினா் இணைந்து தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.