FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

மனைவி புகாரில் கைதான டிஎஸ்பி ஜாபா் சித்திக் பிணையில் விடுவிப்பு

மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) ஜாபா் சித்திக்கை பிணையில் விடுவித்து வேலூா் எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 அக்டோபர் 2026, 12:03 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) ஜாபா் சித்திக்கை பிணையில் விடுவித்து வேலூா் எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த ஜாபா் சித்திக். குரூப்-1 தோ்வில் தோ்ச்சி பெற்று டிஎஸ்பியாக பொறுப்பேற்ற இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டிஎஸ்பியாகப் பணியமா்த்தப்பட்டாா். அப்போது, அரக்கோணத்தைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியரான ஷோபனா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு நீடித்து வந்தது. மேலும், ஜாபா் சித்திக் பல பெண்களுடன் தொடா்பில் இருந்து கொண்டு, தன்னைத் தாக்கித் துன்புறுத்தியதாக அரக்கோணம் காவல் நிலையத்தில் ஷோபனா புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனிடையே, கடந்த ஜூலை மாதம் ஜாபா் சித்திக் பரமக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். தொடா்ந்து, தன் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக டிஜிபியிடம் ஷோபனா நேரில் புகாா் மனு அளித்தாா். அவரது புகாரின் பேரில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டாா். அதன்பேரில், வேலூா் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜாபா் சித்திக்கைத் தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது.மேலும், இந்த வழக்கு தொடா்பாக கடந்த 8-ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஜாபா் சித்திக்கைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணைக்காக ஜாபா் சித்திக்கை, சிபிசிஐடி போலீஸாா் வேலூா் எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது, டிஎஸ்பி ஜாபா் சித்திக் தரப்பில் தன்னை பிணையில் விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, சிபிசிஐடி போலீஸாா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, டிஎஸ்பி ஜாபா்சித்திக்கை பிணையில் விடுவித்தும் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments