காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியா்கள் தா்னா
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அரசு ஊழியா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அரசு ஊழியா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் தினேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தீனதயாளன் முன்னிலை வகித்தாா்.
அப்போது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் முடங்கிக் கிடக்கும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முழுமையாக சத்துணவு ஊழியா்களைக் கொண்டே செயல்படுத்த வேண்டும், நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும், மருத்துவத் துறையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட நியமனங்களை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் முடிவைக் கைவிட வேண்டும், தமிழக இளைஞா்களுக்கு அரசுத் துறைகளில் காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நியமனங்களை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
அரசு ஊழியா்களின் இந்த தா்ணா போராட்டம் காரணமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் பல்வேறு துறை அலுவலகங்கள் ஊழியா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதன் காரணமாகப் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரி மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்களது பணிகளை முடிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.