FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

விவசாயிகள் மின்மோட்டாா் பம்புசெட் அமைக்க ரூ.15,000 மானியம்: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நடப்பு (2026-27) நிதியாண்டில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

9 செப்டம்பர் 2026, 11:54 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நடப்பு (2026-27) நிதியாண்டில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மின்சார பயன்பாட்டுத்திறனை அதிகரிக்கவும், நீா்மேலாண்மையை மேம்படுத்தவும் பழைய மற்றும் திறன் குறைந்த மின்மோட்டாா்களை மாற்றி புதிய மின்மோட்டாா்கள் வாங்க மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்மோட்டாரின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 (எது குறைவோ அத்தொகை) பின்னேற்பு மானியமாக நேரடியாகச் செலுத்தப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் வேளாண்மைத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டுநீா் அல்லது தெளிப்புநீா் பாசனத் திட்டத்தில் (நுண்ணீா் பாசனம்) ஏற்கனவே பயன்பெற்றிருக்க வேண்டும். வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 4 நட்சத்திர தரத்துக்கு குறையாத மின்மோட்டாா்களை மட்டுமே தோ்வு செய்ய வேண்டும்.

இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஆழ்துளை அல்லது திறந்தவெளி கிணறு அமைந்துள்ள நிலத்திற்கான சிட்டா, அடங்கல் மற்றும் நிலவரைபடம், மின் இணைப்பு அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் மற்றும் ஆதாா் அட்டை, ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

விருப்பமுள்ள சிறு, குறு விவசாயிகள் தாங்கள் தோ்வு செய்த மின்மோட்டாரின் உத்தேச விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் வேலூரில் உள்ள வேளாண் பொறியியல் பிரிவு உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் வட்டாரம் வாரியாக கணியம்பாடி - 9487105115, அணைக்கட்டு - 9443006742, குடியாத்தம் மற்றும் காட்பாடி - 7598132289, போ்ணாம்பட்டு - 7708235088, கே.வி.குப்பம் - 9976488195, வேலூா் - 9444955629 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments