FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை

மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் துறையினர் திங்கள்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் துறையினர் திங்கள்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த ஊராட்சியில் அரசு ஒதுக்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும், தமிழகத்திலேயே முதன்முறையாக இந்த ஊராட்சியில் திருநங்கைகளுக்காகக் கட்டப்பட்ட பசுமை வீடுகள் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஊர் பொதுமக்கள் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

 அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை தேக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்குள்ள கோப்புகளை ஆய்வு செய்தனர். ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இதையடுத்து அங்கிருந்து முக்கிய ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments