ரோஹம்ப்டன் பல்கலை. சான்றிதழ்: 33 மாநகராட்சி ஆசிரியர்கள் தேர்வு
இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஹம்ப்டன் பல்கலைக்கழகத்திடம் இருந்து சான்றிதழ் பெற 33 மாநகராட்சி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஹம்ப்டன் பல்கலைக்கழகத்திடம் இருந்து சான்றிதழ் பெற 33 மாநகராட்சி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் புதுமைகளுக்கு அடையாளம் அளிக்கும் வகையிலும் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், கடந்த ஆண்டு 3 ஆசிரியர்கள் சிறந்த புதுமைக்கான சான்றிதழ்களை ரோஹம்ப்டன் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்றனர். அதேபோல, இந்த ஆண்டு கோவை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 33 ஆசிரியர்கள் ரோஹம்ப்டன் பல்கலைக்கழகத்திடம் இருந்து சான்றிதழ் பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், தேசிய அளவில் மாணவர்களுக்கு நிதி சேமிப்பை உணர்த்தும் வகையில் அமெரிக்கன் - இந்தியா பவுண்டேஷன் சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற குறும்படப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 16 பள்ளிகள் பங்கேற்றன.
இதில், மாநில அளவில் முதல் 3 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மேயர் ப.ராஜ்குமார் சான்றிதழ், கேடயத்தை வழங்கினார்.
தேசிய நிதிக் கல்வி மையம் சார்பில் 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேசிய நிதி மேலாண்மை விழிப்புணர்வு திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 2,752 பேர் பங்கேற்றனர்.
தேர்வில் அதிகளவில் கலந்து கொண்ட ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகையை மேயர் ப.ராஜ்குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி, கல்விக் குழுத் தலைவர் சாந்தாமணி, அமெரிக்க - இந்திய பவுண்டேஷனின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வே.அலெக்சாண்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.