FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்காவில் ஆதியோகி சிலை பிரதிஷ்டை

ஈஷா யோக மையம் சார்பில் அமெரிக்காவில் உள்ள டென்னிசி மாகாணத்தில் ஆதியோகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

ஈஷா யோக மையம் சார்பில் அமெரிக்காவில் உள்ள டென்னிசி மாகாணத்தில் ஆதியோகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 சத்குரு ஞானோதயம் அடைந்த நாளான செப்டம்பர் 23-ஆம் தேதி, அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிலையை சத்குரு ஜக்கி வாசுதேவ் பிரதிஷ்டை செய்து பேசியதாவது:

 ஒரு சமூகத்தில் நிகழும் அழிவுகளை வரலாறு பதிவு செய்கிறது. அழகான நிகழ்வுகளை வரலாறு பதிவு செய்வதில்லை. இதில், ஒருவர் ஞானோதயம் அடைவதும் அடங்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வுகள் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட போவதில்லை.

Advertisement

Advertisement

 ஆனால், இவை வரலாறு காணாத நிகழ்வாகும். கடந்த ஆண்டு குரு பெளர்ணமியின் போது கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகியின் பிரம்மாண்டமான காட்சி முதல் முறையாக உலகிற்கு கிடைக்கப் பெற்றது. அதன்பின் அச்சிலை அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது பிரதிஷ்டை செய்து உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார்.

 இந்நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற 3 நாள் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் திரளானோர் கலந்துகொண்டனர். 21 அடி உயரமும், 30 டன் எடையுடனும், உலோகத்தினாலான ஆதியோகி சிலை கோவை ஈஷா யோக மையத்தில் 15 தன்னார்வ தொண்டர்களால் 2 மாதங்களில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments