நொய்யல் ஆற்றை தூர்வாரக் கோரி ஆர்ப்பாட்டம்
நொய்யல் ஆற்றை தூர்வாரக் கோரி கொங்குநாடு ஜனநாயக கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நொய்யல் ஆற்றை தூர்வாரக் கோரி கொங்குநாடு ஜனநாயக கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்தார்.
இதில், கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, பல்வேறு வழித்தடங்கள் வழியாக திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வரை செல்லக் கூடியது. ஆனால் நொய்யல் ஆற்றின் நீர் வழிப்பாதையில் கழிவுநீர் கலப்பதால் ஆறு சீரழிந்து வருகிறது.
Advertisement
Advertisement
எனவே, நொய்யல் ஆற்றை சீரமைப்பதுடன், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுநீர் கலக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மேம்பாலப் பணிகளை மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேம்பாலக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடமுறைத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.