FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கிகளில் அயல் பணி முறையைக் கைவிட கோரிக்கை

வங்கிகளில் உள்ள நிரந்தரப் பணிகளை அயல் பணி (அவுட்சோர்சிங்) முறையில் தனியாருக்கு வழங்கக் கூடாது என்று கனரா வங்கியின் ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

வங்கிகளில் உள்ள நிரந்தரப் பணிகளை அயல் பணி (அவுட்சோர்சிங்) முறையில் தனியாருக்கு வழங்கக் கூடாது என்று கனரா வங்கியின் ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தில் உள்ள கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் 2-வது மாநில மாநாடு கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோவை கோட்டச் செயலர் வி.சுரேஷ் வரவேற்றார்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். வங்கி அதிகாரிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் வணங்காமுடி, வங்கி ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் சி.பி.கிருஷ்ணன், கனரா வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் கே.சி.சேதுமாதவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Advertisement

Advertisement

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வங்கி ஊழியர்களுக்கான பதவி உயர்வு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். வங்கி ஊழியர் தேர்வு முறையை எளிமையாக்க வேண்டும். வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இடஒதுக்கீட்டு முறையை முழுமையாக அமலாக்க வேண்டும். வங்கிக் கிளைகளில் பெண்களுக்கு ஓய்வறை, தனி கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வங்கிகளில் நிரந்தரப் பணிகளில் அயல் பணி முறையைப் புகுத்தக் கூடாது. போனஸ் உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கனரா வங்கி ஊழியர் சங்க மாநிலச் செயலர் என்.ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments