குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
கோவையை அடுத்த பேரூர் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கோவையை அடுத்த பேரூர் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கோவை, பூமார்க்கெட் ராமலிங்க சாலையைச் சேர்ந்தவர் முரளி. இவரது மகன் ரஞ்சித்குமார் (16). இவர் அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தனது நண்பர்கள் ஆறு பேருடன் பேரூரில் இருந்து புட்டுவிக்கி செல்லும் சாலையில் உள்ள குளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். பின்னர் அனைவரும் நீரில் இறங்கிக் குளித்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ரஞ்சித்குமார் நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து, அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் பேரூர் காவல் துறையினர், கோவை, தெற்கு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கித் தேடியபோது ரஞ்சித்குமார் சேற்றில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.