கோயம்புத்தூர்

வால்பாறையில்  கோழியை பிடிக்க வந்த சிறுத்தை பலி

DIN

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பழைய வால்பாறை வரட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவரது வீட்டிற்கு பின்புறம் கோழிகளை அடைத்து வைப்பதற்காக பெரிய கூண்டு ஒன்றும் உள்ளது. 

இதில் அதிகாலையில் ஆண் சிறுத்தை ஒன்று முன்பகுதி இடது கால் நகங்கள் கூண்டில்  மாட்டிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, வால்பாறை வனச்சரக அலுவலரால் சிறுத்தை இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வனக் கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டது. மர்மமான முறையில் சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT