சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பேரணி
ஈரோடு அருகே பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி என்.சி.சி. சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு, போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு அருகே பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி என்.சி.சி. சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு, போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறையில் நடைபெற்ற இப்பேரணியை, கோவை ரைபிள் கிளப் செயற்குழு உறுப்பினர் எஸ்.நேத்ரா சிகாமணி தொடங்கி வைத்தார். பேரணிக்கு கல்லூரித் தாளாளர் வி.கே.முத்துசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.குப்புசாமி முன்னிலை வகித்தார்.
பேரணியில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு குறித்தும், போதைப் பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
பெருந்துறை நகரில் முக்கிய வீதிகளில் இப்பேரணி நடைபெற்றது. என்.சி.சி. அலுவலர் ராகவேந்திரன், என்.சி.சி. மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.