நடமாடும் சிகிச்சைப் பிரிவு: ஓட்டுநர், உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்துக்கு ஓட்டுநர், உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்துக்கு ஓட்டுநர், உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் சனிக்கிழமை விடுத்த செய்தி:
ஓட்டுநர் பணியிடத்திற்கு கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 1.7.2015 அன்று 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதுக்குள்ளும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
வயது வரம்பு தளர்வு 5 ஆண்டுகளாகும் (35 வயது). தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.8 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். உதவியாளர் பணியிடத்துக்கு கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பும், வயது வரம்பு 1.7.2015 அன்று 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்.
வயது வரம்பு தளர்வு 5 ஆண்டுகளாகும் (35 வயது). தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இது முற்றிலும் தாற்காலிகப் பணியாகும்.
எனவே, தகுதியான நபர்கள் அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஈரோடு-638011 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.