தமிழறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்களை கவர்ந்த சாகித்ய அகாதெமி அரங்கு
ஈரோடு புத்தகத் திருவிழாவில் தமிழறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்களை ஈர்க்கும் வகையில் சாகித்ய அகாதெமி அரங்கில் நூல்கள் இடம்பெற்றுள்ளன.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் தமிழறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்களை ஈர்க்கும் வகையில் சாகித்ய அகாதெமி அரங்கில் நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் தமிழறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்களை ஈர்க்கும் வகையில் 500 தலைப்புகளின் கீழ் பல்வேறு நூல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ், ஆங்கில நூல்கள் தவிர பிற மொழியின் தமிழ் மொழிப்பெயர்ப்பு நூல்கள் கவிதை, கதை, இலக்கியம், நாவல், ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு நூல்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆங்கில நூல், பன்முக நோக்கில் அயோத்திதாசர் பண்டிதர், மண்ணும் மனிதரும், பகவான் புத்தர், சாகித்ய அகாதெமி விருது பெற்ற காட்டில் உரிமை, பிரபஞ்சன் படைப்புகள் ஆகிய புதிய நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர மலையாள இலக்கிய வரலாறு, பாகிஸ்தான் சிறுகதைகள், திவ்யப் பிரபந்தம், இந்தியச் சிறுகதைகள், சமகால இந்தியச் சிறுகதைகள், நாட்டுப்புறக் கதை களஞ்சியம், பாடல்களும் நாட்டார் கதைகளும், பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூல், திரௌபதியின் கதை, தமிழக யாப்பு மரபுப் பாவலர்களின் பாக்கள் தொகுப்பு, வடமொழிக் கதைகள், தெலுங்கு நாவல்கள், சிறுகதைகள், தமிழ் கட்டுரைக் களஞ்சியம், பாரதிதாசன் கவிதைகள், கடித இலக்கியம், சங்க இலக்கியப் பாடல்கள், வங்காளிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி, இலக்கியத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள், தமிழறிஞர்களைத் தவிர அனைத்து தரப்பு வாசகர்களை ஈர்க்கும் வகையில் இந்த அரங்கில் நூல்கள் இடம்பெற்றுள்ளன.
புத்தக திருவிழாவில் இன்று...
ஈரோடு புத்தகத் திருவிழாவில் நான்காவது நாளான திங்கள்கிழமை மாலையில் நடைபெறும் சிந்தனை அரங்கில் "இலக்கியத்தின் மூலநோக்கம்' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
யூஆர்சி பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் சி.தேவராஜன் தலைமையில் நடைபெறும் இந்த பட்டிமன்றத்துக்கு இலங்கை ஜெயராஜ் நடுவராகவும், மு.ராமச்சந்திரன், இரெ.சண்முகவடிவேல், சி.பாரதி, த.ராமலிங்கம், இரா.மாது, கவிதா ஜவகர் ஆகியோர் பேச்சாளர்களாகவும் பங்கேற்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.