முகப்பு
ஈரோடு

யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறிய ஓட்டுநர்கள்: ஆசனூர் மலைப்பாதையில் பரபரப்பு

ஆசனூர் மலைப்பாதையில் யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறிய ஓட்டுநர்கள்
பகிர்:

ஆசனூர் மலைப்பாதையில் யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. ஆசனூர் காராப்பள்ளம் என்ற இடத்தில் யானைகள் வழிமறித்து நின்றன. இதனால் யானை செல்வதற்கு கரும்பு லாரியை ஓரமாக ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். 

அப்போது கரும்பு தின்று பழகிய யானைகள், லாரியில இருந்து கரும்புகளை தும்பிக்கையால் எடுத்து தின்றது. யானை வருவதை பார்த்த லாரி ஓட்டுநர்கள் மரத்தின் மீது ஏறி தப்பினர். சிறிது நேரத்துக்கு பின் யானைகள் சென்ற பின் மற்றொரு லாரியில் இறங்கி லாரியை இயக்கினர். 

யானைகள் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் மரத்தின் மீது ஏறிய தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →