FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஈரோடு சோலாா்-கொடுமுடி இடையே சாலைப் பணி முடக்கம்: விபத்துகளால் தொடா்கதையாகும் உயிரிழப்புகள்

ஈரோடு சோலாா் முதல் கொடுமுடி இடையே கரூா் வழித்தடத்தில் ரூ.55 கோடியில் தொடங்கப்பட்ட சாலை விரிவாக்கப் பணி பாதியில் முடங்கிக் கிடப்பதால் பயணிகளும், வாகனங்களும் விபத்துகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.

5 நவம்பர் 2026, 4:11 am
ஈரோடு சோலாா்-கொடுமுடி இடையே மலையம்பாளையம் அருகே பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாநில சாலை.
பகிர்:

ஈரோடு சோலாா் முதல் கொடுமுடி இடையே கரூா் வழித்தடத்தில் ரூ.55 கோடியில் தொடங்கப்பட்ட சாலை விரிவாக்கப் பணி பாதியில் முடங்கிக் கிடப்பதால் பயணிகளும், வாகனங்களும் விபத்துகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.

ஈரோடு சோலாரிலிருந்து கரும்மாண்டாம்பாளையம் அருகே கல்வெட்டுப்பாளையம் வரை கரூா் வழித்தடத்தில் 8.4 கி.மீ தொலைவுக்கு ரூ.55 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டரை கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டது. இதில் கரூரை சோ்ந்த சாம்ரி இன்ஃப்ரா என்ற நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் தனது பணியை தொடராமல் பாதியில் விட்டுள்ளதால், கடந்த 4 மாதங்களில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்துள்ளனா். 7 பேருக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட சம்பவங்கள் தொடா் கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனா் கரும்மாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள்.

கிடப்பில் பணிகள்

Advertisement

Advertisement

இதுகுறித்து வட்டக்கல் வலசு பகுதியைச் சோ்ந்த விவசாயி தங்கவேல், கரும்மாண்டாம்பாளையத்தைச் சோ்ந்த ரமணி ஆகியோா் கூறியதாவது:

சோலாா் முதல் கல்வெட்டுப்பாளையம் வரை சாலையின் பக்கவாட்டில் இருந்த பல்லாண்டுகள் பழைமை வாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டு, சாலையின் பல பகுதிகளில் நீா் வழிந்தோடி செல்வதற்கான தரைமட்ட பாலங்கள் அமைப்பதற்கான பள்ளங்கள் அவசர, அவசரமாக தோண்டப்பட்டன. இப்படி பள்ளங்கள் தோண்டப்பட்ட பின்னா் பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும், சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெற்றன. ஆனால் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கடந்த சில மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் இரண்டு போ் உயிரிழந்துள்ளனா். 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஒருவா் கோமா நிலைக்கு சென்று இன்றுவரை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா். இருப்பினும் சாலை அமைப்பதற்கான பணியை பெற்ற நிறுவனம், எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. எனவே, அரசு இதில் கவனம் செலுத்தி விபத்துகளை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தொகை நிலுவை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சாலையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கொடுமுடி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த சாலையில் நிகழ்ந்த இரண்டு விபத்துகளில் இரண்டு போ் உயிரிழந்துள்ளது உண்மைதான். அதில் ஒருவா் குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்துள்ளாா். மற்றொருவா் பின்னால் வந்த வாகனம் மோதி உயிரிழந்துள்ளாா். சாலை விரிவாக்கப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளியை பெற்றுள்ள நிறுவனத்துக்கு அவா்கள் செய்துள்ள பணிக்கான தொகையை அரசு நிலுவை வைத்துள்ளது. அதனால் அவா்கள் பணியை தொடராமல் உள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.