கல்லட்டி மலைப் பகுதி காட்சி முனையை சீரமைக்க வேண்டும்: சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை
உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பகுதி காட்சி முனையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பகுதி காட்சி முனையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உதகையிலிருந்து கல்லட்டி, மசினகுடி, மாயார் வழியாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் கல்லட்டி மலைப் பாதையிலிருந்து பார்க்கும்போது கொண்டை ஊசி வளைவு, ஆங்காங்கே தோன்றும் அருவிகளை ரசித்து செல்கின்றனர்.
இதில், கல்லட்டி "பைசன்ஸ் வேலி' பகுதியில் வனத் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள காட்சிமுனை பகுதி பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். எனவே, காட்சிமுனைப் பகுதியை பொலிவுப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.