அவிநாசியில் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கல்
அவிநாசியில் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அவிநாசியில் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி அரசு மருத்துவமனை, சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அவிநாசி ஊரக, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பிறந்த குழந்தைகளுக்கு, அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா, அவிநாசி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு அவிநாசி அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவ அலுவலர் எஸ்.சோமசுந்தரம் தலைமை வகித்தார். சேவூர் வட்டார மருத்துவர் ராமசாமி, மருத்துவர்கள் திருவளர் பிரபு, பாலாஜி, கூட்டுறவுச் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி, அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தை குழந்தைகளின் தாய்மார்களுக்கு வழங்கினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.