FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மண் அள்ளும் விவகாரம்: சமூக ஆர்வலரை தாக்கிய வழக்கில் மேலும் 10 பேர் கைது

புதுப்பாளையத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த, சமூக ஆர்வலர் பிரபாகரனைத் தாக்கிய வழக்கில் மேலும் 10 பேரை சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

புதுப்பாளையத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த, சமூக ஆர்வலர் பிரபாகரனைத் தாக்கிய வழக்கில் மேலும் 10 பேரை சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

 அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் குளத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை எதிர்த்து சமூக ஆர்வலர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றிருந்தார். ஆனால் குளத்தில் மண் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வந்தது.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 26-ஆம் தேதி புதுப்பாளையம் குளத்துக்கு சென்ற சமூக ஆர்வலர் பிரபாகரனை, அங்கிருந்த மண் அள்ளும் கும்பல், தாக்கி அனுப்பர்பாளையம் காவல்நிலைத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement

பெட்ரோல் குண்டு வீசியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து பொதுமக்கள், பல்வேறு சமூக நல அமைப்பினர், பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மீதும், பிரபாகரனைத் தாக்கிய மண் அள்ளும் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, போராட்டங்களில் ஈடுபட்டனர். பிறகு மே 30-ஆம் தேதி பிரபாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கும், நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டது.

 மேலும், சமூக ஆர்வலர் பிரபாரகன் மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும், அவரைத் தாக்கிய கும்பல் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்றும், பிரபாகரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த வந்த சிபிசிஐடி போலீஸார், பிரபாகரனைத் தாக்கிய வழக்கில் தொடர்புடைய, புதுப்பாளையத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி (45), ஆர்.பொன்னுச்சாமி (54), பி. ராஜ்குமார் (35), அப்புக்குட்டி(எ) ராயப்பன் (37), ஏ. மணி (44), ஆர்.பொன்னுச்சாமி (30), கே.குமாரசாமி (41), என்.பொன்னுச்சாமி (36), பி.தமிழரசன் (24),  ஆர். கார்த்திகேயன் (39) உள்ளிட்ட 10 பேரை கைது, மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏற்கெனவே இவ்வழக்கில் முக்கியத் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments