திருப்பூரில் மார்க்சிஸ்ட் சார்பில் எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூர்திருப்பூரில் மார்க்சிஸ்ட் சார்பில் எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி திருப்பூர் அரிசிக் கடை வீதியில் இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
குளறுபடியான மின் கட்டணத்தை ரத்து செய்து, மாதந்திர கணக்கீடு அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுசுகாதாரம், மருத்துவப் பணிகளை அதிகரிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்களின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், தெற்கு மாநகர செயலாளர் டி.ஜெயபால், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பி.பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.