முகப்பு
திருப்பூர்

அவிநாசியை நகராட்சியாக்கக் கோரி பாஜகவினர் கையெழுத்து இயக்கம்

அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கக் கோரி பாஜகவினர் அவிநாசி பகுதியில் புதன்கிழமை மாலை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
அவிநாசியை நகராட்சியாக்கக் கோரி பாஜகவினர் கையெழுத்து இயக்கம்
பகிர்:

அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கக் கோரி பாஜகவினர் அவிநாசி பகுதியில் புதன்கிழமை மாலை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியை பாஜக மாவட்டத் தலைவர் செந்தில் வேல் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், “அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக முதல்வருக்குத் தபால் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் போராட்டங்கள் தொடரும்” என்றார்.

மாவட்ட பொதுச் செயலாளர் கதிர்வேல், மண்டலத் தலைவர்கள் சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, கலை கலாச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன், ஊரக நகர்ப்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →