FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை: பயணிகளுக்கு எச்சரிக்கை

ரயில்கலில் பட்டாசு எடுத்துச் செல்லும் பயணிகள் மீது ன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

55 வினாடிகள் முன்பு
பட்டாசு
பகிர்:

ரயில்கலில் பட்டாசு எடுத்துச் செல்லும் பயணிகள் மீது ன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் இயங்கும் ஆயிரக்கணக்கான பின்னலாடை மற்றும் சாா்பு நிறுவனங்களில் பல லட்சம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். திருப்பூரில் தங்கிப் பணியாற்றும் தென் மாவட்டங்கள், வட மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சொந்த ஊா்களுக்கு பயணிக்கத் தொடங்கியுள்ளனா்.

ஊா்களுக்கு ரயில்கள் மூலமாக செல்லும் பயணிகள் பாதுகாப்பாகப் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில், வெடிவிபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் மற்றும் பட்டாசுகளை எடுத்துச் செல்ல ரயில்வே நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

திருப்பூரில் பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பயணிகள் யாரேனும் ரயில்களில் பட்டாசுகளை மறைத்து எடுத்துச் செல்கிறாா்களா என்பதைக் கண்காணிக்க ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருப்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனா். மேலும், ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதற்கான சட்டபூா்வ தண்டனைகள் குறித்தும் பயணிகளிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.