மண்ணில் புதையுண்டிருந்த விநாயகர் கோயில் கண்டுபிடிப்பு
அரூர் அருகே விளை நிலத்தில் புதையுண்டிருந்த பழைமையான விநாயகர் கோயில் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
அரூர் அருகே விளை நிலத்தில் புதையுண்டிருந்த பழைமையான விநாயகர் கோயில் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள நவலை எட்டிப்பட்டியில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் அள்ளும் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மண்ணில் புதையுண்ட நிலையில் விநாயகர் கோயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கிணறு தோண்டும்போது வெளியேற்றிய மண் குவியல்கள் இந்தக் கோயில் அருகே கொட்டப்பட்டிருக்கலாம் என்றும், அது காலப்போக்கில் அந்தக் கோயிலை மூடியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் நவலைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.