ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்தது.
கடந்த சில நாள்களாக கா்நாடக காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்கத்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை 6,000 கன அடியாக அதிகரித்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள ஐவாா் பாணி, ஐந்தருவி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
Advertisement
Advertisement