மோளையானூரில் 77 மி.மீ மழை பதிவு!
மோளையானூரில் 77 மில்லி மீட்டர் மழை பதிவானது பற்றி..
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மோளையானூரில் 77 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையில் மிதமான மழை பெய்தது.
இந்த மழையானது மோளையானூரில் 77 மி.மீ மழையும், பாப்பிரெட்டிப்பட்டியில் 66 மி.மீ மழையும், மெணசியில் 64.3 மி.மீ, நடூரில் 45 மி.மீ., அரூரில் 22 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
மழையின் காரணமாக சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், வேளாண் விளை நிலங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், மிதமான மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.