12 கிலோ கஞ்சா: தம்பதி கைது
சூளகிரி அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கணவன், மனைவியைக் கைது செய்தனா்.
சூளகிரி அருகே கிருஷ்ணாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கங்காதுரை (32). இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் சையத் சுல்தான் பாட்ஷா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மாட்டுக் கொட்டகையில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக கங்காதுரை, அவரது மனைவி பவித்ரா (25) ஆகிய இருவரையும் சூளகிரி போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.