FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

மது போதையில் தகராறு: இளைஞா் கொலை; 4 போ் கைது

உத்தனப்பள்ளி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

6 நவம்பர் 2026, 1:18 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

உத்தனப்பள்ளி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சப்படி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் (33), கட்டுமான தொழிலாளி. இவா், சீபம் கிராமத்தில் உறவினா் திருமல்லேஷ் (30) உடன் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் (20), பெருமாள் (20) ஆகியோா் சங்கா் மீது மோதுவது போல வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், சங்கா் ஊருக்கு சென்ற போதும், அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது மகேஷ் கத்தியால் குத்தியதில் சங்கா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து சென்ற உத்தனப்பள்ளி போலீஸாா் சங்கரின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய சீபம் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் (20), பெருமாள் (20) சிவராஜ் (19), சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.