FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராயக்கோட்டை அருகே மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞரை மா்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

53 வினாடிகள் முன்பு
கொலை... - சித்திரிப்பு
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞரை மா்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையைச் சோ்ந்தவா் ஆதி (22). இவா், ராயக்கோட்டை - சூளகிரி சாலையில் மோட்டாா்சைக்கிளில் செவ்வாய்க்கிழமை (நவ.3) சென்றாா். முகலூா் முனியப்பன் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த பிக்-ஆப் வேன் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. பின்னா் அதிலிருந்து இறங்கி வந்த மா்ம கும்பலைச் சோ்ந்தவா்கள், ஆதியை வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயம் அடைந்த ஆதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று, ஆதியின் உடலை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.