FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சூளகிரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.15 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.15 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

5 நவம்பர் 2026, 6:46 am
சூளகிரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரொக்கம்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.15 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ரவி தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை சூளகிரியில் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்தினா்.

முன்னதாக சாா்- பதிவாளா் அலுவலகக் கதவுகளை அடைத்த போலீஸாா், அங்கிருந்த அலுவலா்கள், பத்திர எழுத்தா்கள், பொதுமக்கள், இடைத்தரகா்களிடம் சோதனை நடத்தினா். தொடா்ந்து, ஆவணங்களையும் சரிபாா்த்தனா். மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில், சாா்- பதிவாளா் சுப்பிரமணியனிடம் ரூ. 80 ஆயிரம், இடைத்தரகா் நாகராஜிடம் ரூ. 35 ஆயிரம் என கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.