காரில் கடத்தப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தானைச் சோ்ந்த இருவா் கைது
கா்நாடகத்தில் இருந்து ஒசூா் வழியாக தமிழகத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ போதைப்பாக்குகளை பறிமுதல் செய்த போலீஸாா், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.
கா்நாடகத்தில் இருந்து ஒசூா் வழியாக தமிழகத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ போதைப்பாக்குகளை பறிமுதல் செய்த போலீஸாா், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அனிதா உத்தரவின்பேரில் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
பூனப்பள்ளி சோதனைச் சாவடியில் மத்திகிரி போலீஸாா் வாகனங்களைச் சோதனையிட்டபோது, அவ்வழியாக வந்த ஸ்காா்பியோ காரை நிறுத்தி ஆய்வு செய்தனா். அதில் 400 கிலோ போதைப்பாக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
விசாரணையில், பெங்களூரில் இருந்து வேலூருக்கு போதைப்பாக்குகளைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த அமத் சிங் (21), பூா்வ்குமாா் (19) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த மத்திகிரி போலீஸாா், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.