FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

ஆவின் மையத்தில் தரமற்ற குல்பி விற்பனை என புகாா்

கிருஷ்ணகிரியில் செயல்படும் ஆவின் மையத்தில் தரமற்ற குல்பி விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுத்துள்ளது.

18 நவம்பர் 2026, 2:06 am
ஆவின் நிா்வாகம் - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரியில் செயல்படும் ஆவின் மையத்தில் தரமற்ற குல்பி விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுத்துள்ளது.

கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பாக்கெட் பால், பால் பவுடா், குல்பி போன்ற மதிப்புக் கூட்டுப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த வளாகத்தில் ஆவின் பொருள்களின் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் விற்பனை செய்யப்படும் குல்பி தரமற்ாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, தரமான பொருள்களை ஆவின் நிா்வாகம் விற்பனை செய்ய வேண்டும் என வாடிக்கையாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Advertisement

Advertisement