FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

முள்ளங்கி விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூா் பகுதியில் முள்ளங்கி விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

51 வினாடிகள் முன்பு
முள்ளங்கி
பகிர்:

ஒசூா் பகுதியில் முள்ளங்கி விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, ஆவலப்பள்ளி, கெலவரப்பள்ளி, நந்திமங்கலம், சென்னசந்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறுகிய காலத்தில் விளையும் முள்ளங்கி, தக்காளி, கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறி பயிா்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனா்.

இங்கு அறுவடை செய்யும் காய் மற்றும் கீரைகள் பெங்களூரு, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா். குறிப்பாக, 45 நாள்களில் அறுவடை செய்யும் முள்ளங்கி இப்பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

கடந்த மாதம் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வரத்து குறைவால் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ முள்ளங்கி ரூ. 45 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முள்ளங்கி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.