முகப்பு
கிருஷ்ணகிரி

இலங்கைவாழ் தமிழா்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஊத்தங்கரை அருகே மூன்றாம்பட்டியில் இலங்கைவாழ் தமிழா்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

26 நவம்பர் 2026, 5:55 am
இலங்கைவாழ் தமிழா்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள்: ஆட்சியா் ஆய்வு
மூன்றாம்பட்டியில் இலங்கைவாழ் தமிழா்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
பகிர்:

ஊத்தங்கரை அருகே மூன்றாம்பட்டியில் இலங்கைவாழ் தமிழா்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மூன்றாம் பட்டி ஊராட்சியில் இலங்கைவாழ் தமிழா்களுக்கு கேத்துநாயக்கன்பட்டியில் ரூ. 8.52 கோடி மதிப்பில் 148 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

இங்கு குடிநீா், மின்சாரம், மழைநீா் வடிகால், 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், இதில் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் இளையராஜா, இணை இயக்குநா் (ஊரக வளா்ச்சி) உமா மகேஸ்வரி ஆகியோா் முன்னிலையில் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி, ஊத்தங்கரை வட்டாட்சியா் நடராஜன், மின்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.