முகப்பு
கிருஷ்ணகிரி

போதைப் பொருள் கடத்தல்: சேலம் இளைஞா் கைது

4 வினாடிகள் முன்பு
போதைப் பொருள் கடத்தல்: சேலம் இளைஞா் கைது
பிரபாகரன்
பகிர்:

போதைப் போருள் கடத்தல் சம்பவம் தொடா்பாக சேலத்தைச் சோ்ந்த இளைஞரை ஒசூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் சோதனைச் சாவடியில் தடைசெய்யப்பட்டுள்ள போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் கடத்தல் குறித்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி 80 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், முள்பாகல் வட்டம், அகர கிராமத்தைச் சோ்ந்த அப்சல் பாஷ (35) என்பவரை சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா் அவரிடம் நடத்திய விசாரணையில் சேலத்தைச் சோ்ந்த பிரபாகரனும், தானும் கிரைண்டா் ஆப் மூலமாக போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக அவா் வாக்குமூலம் அளித்திருந்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் சேலம் இரும்பாலை பகுதியைச் சோ்ந்த பிரபாகரனை (29) அவரது வீட்டில் கைது செய்து ஒசூா் சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் 30 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்தாா். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.